எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ஸ்கிம்ஸ்) அவர் தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை எனது கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டேன். எனக்கு தடுப்பூசி போட்டதற்காக ஸ்ரீநகர் ஸ்கிம்ஸில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் உமர் அப்துல்லா இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாகவும் செயற்கை சுவாசக் கருவி இன்றி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உமர் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


