எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய 5 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் ராஜூப் பானர்ஜியை ஆதரித்து அம்மாநிலத்தின் டோம்ஜூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது பேசிய அமித்ஷா, நான் இங்கு ஒரேஒரு கிராம பஞ்சாயத்தை மட்டும்தான் பார்வையிட்டேன். ஆனால் அங்குள்ள உற்சாகத்தை பார்க்கும்போது பெரும்பான்மையுடன் ராஜூப் பானர்ஜி வெற்றிபெறுவார் என்று நான் நம்புகிறேன்.
மே 2-ம் தேதி மேற்குவங்காளத்தில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியமைக்கும். மம்தா பானர்ஜியின் பேச்சு மற்றும் நடத்தையை பார்க்கும்போது அவர் மிகுந்த வெறுப்பில் உள்ளார் என்று தெரிகிறது’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


