Idhayam Matrimony

அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று  சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஜெயக்குமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் ஆகியோரது புகைப்படங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என்று 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

இதன் பிறகு 1990-ம் ஆண்டு அம்பேத்கர் புகைப்படத்தையும், 2006-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சி., காயிதேமில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் மற்றும் தமிழன்னையின் படங்களையும் வைப்பதற்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு அலுவலகங்களில் பிரதமர், ஜனாதிபதியின் புகைப்படங்களை வைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், புகைப்படங்களை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று அந்த அரசாணைகளில் கட்டாயப்படுத்தவில்லை என்று வாதிட்டார்.  இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில், ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து