Idhayam Matrimony

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அபுதாபி சென்றார்

திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மந்திரி ஷா மஹ்மூத் குரேசி துபாய் வந்தார். தொடர்ந்து அவர் துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் பார்வையிட்ட அவர், அமீரகம் சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார். இது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக அபுதாபிக்கு வந்தடைந்தார். அவரை அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்துக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார்.

இதற்கிடையே இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் அமீரகம் வந்திருப்பது பல்வேறு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு வெளியுறவு மந்திரிகளும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேசியும் 3 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் வந்துள்ளதை மேற்கோள் காட்டி, அமெரிக்காவுக்கான அமீரக தூதர் யூசெப் அல் ஒதைபா, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றத்தை குறைப்பதிலும், இருதரப்பு உறவுகளை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்வதிலும் அமீரகத்திற்கு பங்கு உள்ளது என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கிடையே அமீரகம் இருநாட்டு பிரச்சினைகளில் சமரசத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து