எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்பனையானது.
தங்கம் விலை கடந்த மாத இறுதியில் ஏற்றதாழ்வுடன் இருந்து வந்தது. அதன்பின் விலை உயர்ந்தபடி இருந்ததால் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.384 குறைந்து ரூ.35 ஆயிரத்து 576-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.472 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 59 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 506 ஆக இருந்தது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.73 ஆயிரத்து 900 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் விலை தொடர்ந்து உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதின் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


