Idhayam Matrimony

கொரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.  இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையால் நேற்று முன்தினம் மட்டும், இதுவரை இல்லாத அளவாக 3.14 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. கடந்த செவ்வாயன்று நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால், ஊரடங்கு தேவையில்லை. நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில், படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரம் பாதிக்காத வகையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்  என தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 23) ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து உயர்மட்ட குழுவுடன் நாளை(இன்று) ஆலோசனை நடத்த உள்ளேன். இதனால், நாளை(இன்று), நான் மேற்கு வங்கத்திற்கு செல்லவில்லை. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து