எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து மகராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 2 ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா, டெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், சண்டிகர் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். இதனை தடுக்க பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக ஆக்சிஜனை அனுப்பி வருகிறது.
அந்த வகையில் மகராஷ்டிர மாநிலத்துக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயிலில் ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. ஆக்சிஜன் டேங்கருடன் கூடிய லாரிகளை விசேஷ சரக்கு ரயிலில் நேரடியாக ஏற்றி அதன் மூலம் கொண்டு செல்கிறார்கள். இதே போல ஜார்க்கண்ட் மாநிலம் போகோராவில் இருந்தும் ஒரு ரயில் புறப்படுகிறது. அந்த ரயிலில் வரும் ஆக்சிஜன் உத்தரபிரதேச மாநிலத்துக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக லக்னோவில் இருந்து டேங்கர் லாரிகளுடன் விசேஷ ரயிலை பகோராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவை ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு வாரணாசி வழியாக உத்தரபிரதேசத்துக்கு வருகிறது. பின்னர் அவை பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை சாலை வழியாக அனுப்பி வைத்தால் தாமதம் ஆகும் என்பதற்காக ரயிலில் அனுப்புகின்றனர். இந்த ரயில்கள் 62 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து குறிப்பிட்ட இலக்குகளை அடையும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


