எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, உள்திருவிழாவாக நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர். மீனாட்சி பட்டாபிஷேகம் இரவு 8.05 மணிக்கு மேல் 8.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் நடந்தது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கி, பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. அதன் பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக பூப்பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார்.
அதை தொடர்ந்து நேற்று சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு மீனாட்சி அழைக்கும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று 24-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை.
திருக்கல்யாணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் மணக்க தம்பதி சமேதரராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரரேஸ்வரரைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேரில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் இருப்பதால் இந்த முறையும் தேரோட்டம் நடைபெறாது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ


