எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒரே நாளில், சென்னையில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, விமான பயணிகள் தங்களது பயணங்களை தவிர்த்து வருவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கோவை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவா ஆகிய இடங்களுக்குச் செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல அந்த நகரங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 15 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்ட விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. விமானத்தில் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதற்கு கொரோனா அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய காரணம் இருப்பதாலும் பலர் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றனர் .
பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும். இ-பாஸ் இருக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் விமானத்தின் நடு இருக்கையில் அமரும் பயணிகள் கவச உடை அணிந்து தான் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களை விரும்பாத பயணிகள் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதே போல் மதுரை விமானநிலையத்திலிருந்தும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


