முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையை பார்க்க வந்த மகனிடம் இறப்பு சான்றிதழ் நீட்டிய மருத்துவமனை

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை நேரில் பார்க்க வந்த மகனிடம் தந்தையின் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அலகாபாத்திலுள்ள துமன்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் லால் ஸ்வரூப். இவர் தனது உடல் நலம் குன்றிய 82 வயது தந்தை பச்சி லாலை அலகாபாத்தின் ராணி நேரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். கடந்த 12-ம் தேதி முதல் கொரோனா சிகிச்சையில் இருந்த தனது தந்தையை தினமும் சந்திக்க ஸ்வரூப் அனுமதிக்கப்படவில்லை. நான்கு அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் ஸ்வரூபால் தன் தந்தையைப் பார்க்க முடிந்தது.

எனினும் அவருக்குத் தேவையானப் பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை மருத்துவமனைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் ஸ்வரூப். பிறகு கடந்த 19-ம் தேதி மருத்துவமனை சென்ற லால் ஸ்வரூப், தன் தந்தையின் படுக்கையில் வேறு ஒருவர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுபற்றி அங்குள்ள செவிலியர்களிடம் விசாரித்த போது, பச்சி லால், வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். அப்பிரிவிற்கு சென்றும் தன் தந்தையைக் காணாமல் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஸ்வரூப் புகார் செய்தார்.

பின்னர் விசாரணையில் பச்சி லால் கடந்த 17-ம்  தேதி இறந்து விட்டதாகத் தெரிந்துள்ளது. அதன் பிறகு லால் ஸ்வரூபிடம் அவரது தந்தையின் உடலுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதற்குள் பச்சிலாலை ஒரு அனாதையாக கருதி மருத்துவமனையினரே இறுதி சடங்கு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லால் ஸ்வரூப் அம்மருத்துவனையினர் மீது அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து