Idhayam Matrimony

எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : உ.பி. முதல்வர் யோகி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.  மராட்டியம் உத்தரப்பிரதேசம், டெல்லி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையான அளவில் உள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசித் தட்டுப்பாடும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது. 

தற்போது பிரச்சினை என்னவென்றால், ஆக்சிஜனை பதுக்குவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும்தான், அதை இரும்புக்கரம் கொண்டு முடிவுக்கு கொண்டு வருவோம். முதல் அலையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொரோனா 2-வது அலையில் பாதிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து