எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மே 1-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் நிர்வாகத் திறன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
விவாதித்தது போதும். நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.
மே 1-ம் தேதி முதல் 3 விதமான விலைகளில் தடுப்பூசிகள் கிடைக்கும். சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.
பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையில் கொடுக்கின்றன.
ஒரே தடுப்பூசி வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்கள் மக்களுக்கு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


