Idhayam Matrimony

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பு : முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு  எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனினும் கடந்த சில நாட்களாக மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் முன்பு போல உயர்ந்து கொண்டே செல்லாமல் சீராக இருந்து வருகிறது.

 இந்த நிலையில், மராட்டியத்தில் கொரோனா பரிசோதனைகளை குறைத்ததே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பாதிவாவதற்கு காரணம் என்று முன்னாள் முதல்வர்  தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் எழுதிய கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

மும்பை உள்பட மாநிலத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது தொற்று அபாயத்தை அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரண எண்ணிக்கையும் 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. பழைய ஆவணங்கள் அப்டேட் செய்யப்படவில்லை.  கொரோனா குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து