Idhayam Matrimony

நாட்டில் 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

நாடுமுழுவதும் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன.  இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் 2-வது அலை பரவலை தடுத்து நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

150 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்று கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியானது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்பு போல பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது. அதன்படி 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதை தவிர கொரோனா பரவல் வீதத்தை கட்டுப்படுத்த சோதனைகளை தீவிரப்படுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. புதிதாக கொண்டு வரும் கூடுதல் கட்டுப்பாடுகளை மே மாதம் 31-ம் தேதி வரை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

முக கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து