எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ. 22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக நேற்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். இந்த மருந்து வெளி மார்க்கெட்டிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கிடைப்பதில்லை. அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் விற்கப்படுகிறது. இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து டாக்டர்களின் பரிந்துரை கடிதத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை யெடுக்கிறார்கள்.
2 நாட்கள் வரை காத்திருந்தால்தான் மருந்து கிடைக்கிறது. அந்த அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு 6 குப்பி மருந்து என்ற ரீதியில் விற்கப்படுகிறது. ஒரு குப்பி மருந்தின் விலை ரூ.1560 ஆகும். மொத்தம் 9,360 ரூபாய்.
ஆனால் இதை சிலர் கள்ளச்சந்தையில் வாங்கி ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் விற்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்ததாக தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் முகமது இம்ரான்கான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மேடவாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக நேற்று தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் தீபன் மற்றும் தனியார் மருந்தக ஊழியர் நரேந்திரன் ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் மருந்து எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தொடர்ந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இந்த மருந்துகள் வெளியே கொடுக்கப்படுகிறது என்பது பற்றி உயர் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். இதில் சம்பந்தமாக மேலும் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


