Idhayam Matrimony

எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க. கடமைகளை நிறைவேற்றும் : ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். கூட்டறிக்கை

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தனது கடமைகளை நிறைவேற்றும் என்று ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

இதற்கிடையே முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேரை சரியாக செலுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க. பணியாற்றி தனது கடமைகளை நிறைவேற்றும். 

10 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிஎன்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து