எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை, மருந்து வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்தி ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துகள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்டவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்யும் செயல்களும் அரங்கேறி வருகிறது. இந்த கள்ளசந்தை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஒரு கும்பல் கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளசந்தையில் விற்பனை செய்ய முயன்ற 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 115 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 கார்கள், 4,90,000 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


