Idhayam Matrimony

கொரோனாவை எதிர்கொள்ள ஐதராபாத் அணி உரிமையாளர் ரூபாய் 30 கோடி நன்கொடை

திங்கட்கிழமை, 10 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெங்களூர் : கொரோனாவை எதிர்கொள்ள  ஐதராபாத் அணி உரிமையாளர் ரூபாய் 30 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

தொற்று அதிகம்...

இந்தியா கொரோனா தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 4 லட்சத்தை தொட்ட வண்ணம் உள்ளதால் ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

சன் டிவி நெட்வொர்க்...

இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் போட்டியில விளையாடும் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் கொரோனாவை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசுகள், என்.ஜி.ஓ போன்றவற்றால் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்த பணம் நன்கொடையாக வழங்கபடுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து