எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.31 - தமிழர்களின் நலனில் அக்கறை காட்டாதது மட்டுமின்றி அவர்களின் முதுகெலும்பை உடைக்க நினைக்கும் மத்திய அரசுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சரத்குமார் வெளியிட் டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகிறது. தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவோ, தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ மறுத்து வரும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தால் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இலங்கை நட்பு நாடு பயிற்சி கொடுப்போம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார்.
நம் ரத்த பந்தங்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தவர்களிடம் நட்பு பாராட்டுகிறார்கள். கூடங்குளத்தில் முதல்கட்டமாக இரண்டு அணு உலைகளில் தயாராகும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்றால் இதுவரை பதில் இல்லை.
தமிழக மீனவர்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை இலங்கை அரசை கண்டிக்க தயக்கம் காட்டுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையில் nullநீர்மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாதது மட்டுமின்றி புதிய அணை கட்டுவோம் என்று தொடர்ந்து அச்சுறுத்தும் கேரள அரசை தட்டிக்கேட்க மத்திய அரசுக்கு திராணி இல்லை.
காவிரி நதிnullநீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியும் இதுவரை பதில் இல்லை. தானே புயல் நிவாரணத்திற்கு போதிய நிதியை வழங்காமல் கைவிட்டு விட்டார்கள்.
இப்போது தமிழக மக்களின் நலனில் அக்கறை காட்டாதது மட்டுமின்றி தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு நசுக்கி தமிழர்களின் முதுகெலும்பை உடைக்க நினைக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக மக்கள் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை புரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |