Idhayam Matrimony

மே.வங்கத்தில் குடிசையில் வாழும் பெண் எம்.எல்.ஏ. : உணவு வழங்கும் பாதுகாப்பு படை வீரர்கள்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் குடிசையில் வாழும் பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ.வுக்கு உணவும் வழங்கி பாதுகாப்பையும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின்  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி.  சமீபத்தில் நடந்து முடிந்த  சட்டசபை  தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

மேற்குவங்காளத்தில் நடைபெறும் வன்முறையால் அங்குள்ள  பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும்  மத்திய பாதுகாப்புபடை வழங்கப்பட்டு உள்ளது . தனது கட்சியின் முடிவுக்கு  எம்.எல்.ஏ  சந்தனாவும் கட்டுப்பட்டு உள்ளார்.   தினசரி கூலித்தொழிலாளியின்  மனைவியான எம்.எல்.ஏ. சந்தனா. தனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட நான்கு மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு அல்லது அவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை.  எம்.எல்.ஏ.வின் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் பாழடைந்த ஒற்றை அறை குடிசையில்  தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி  கூட இல்லாமல் வசித்து வருகின்றனர். 

ஊரடங்கால்  எம்.எல்.ஏவின் கணவருக்கும் வேலை இல்லை.  இதனால் பாதுகாப்பு பணிக்கு சென்ற மத்திய படை வீரர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு உள்ளூர் மளிகைப் பொருட்களிலிருந்து காய்கறிகளை  வாங்கி  எம்.எல்.ஏவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு  வழங்கி வருகின்றனர்.  என் கணவர் ஒரு கூலித்தொழிலாளி . எங்கள் தினசரி சராசரி வருமானம் ரூ .400 ஆகும். ஊரடங்கால் வருமானம் இல்லை என்று எம்.எல்.ஏ. கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து