Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு: நடிகர் வெங்கட் சுபா மரணம்

சனிக்கிழமை, 29 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் நேற்று உயிரிழந்தார். 

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சினிமா பிரபலங்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா பிரபலங்களும் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அந்த வரிசையில் நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நடிகர் வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது சினிமா பிரபலங்கள் இடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வெங்கட் சுபா பல்வேறு சின்னத்திரை தொடர்கள், அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தனது யூடியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து