எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.8 - கன்னியாகுமரி- தூத்துக்குடி- தஞ்சாவூர்- திண்டுக்கல்- மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் உள் விளையாட்டரங்கங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா ரூ.7 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஆரோக்கியமுள்ள வருங்கால மனித வளத்தினை உருவாக்குவதில் விளையாட்டுத்துறை பெரும் பங்கு வகிக்கின்றது. கல்வி ஒருவரது அறிவுத் திறனை வளர்க்கும், அதே நேரத்தில் விளையாட்டு அவரது உடல் நலத்தைக் காக்கும். எனவே கல்வியும், விளையாட்டும் ஒவ்வொருவருக்கும் இரு கண்களாகும். எனவே தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மாவட்டங்களில் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வசதியாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் 20 மாவட்டங்களில், 30 கோடி ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், முதற்கட்டமாக சென்ற ஆண்டு ஸ்ரீரங்கம், கோயம்புத்தூர், விழுப்புரம் காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய 5 இடங்களில், தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் உள் விளையாட்டரங்கங்கள் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாம் கட்டமாக, 2012-13 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், மற்றும் மதுரை ஆகிய
5 மாவட்டங்களில் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்னொளி வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டரங்கங்கள் தலா
1 கோடியே 50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளினால், தமிழகத்தில் விளையாட்டில் அதிக ஆர்வமுள்ளவர்கள் கண்டறியப்பட்டு, வருங்காலத்தில் தமிழகத்திலிருந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் பங்கு பெற வழிவகை ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026


