எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர் : பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிரோண்மனி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ( 2022) தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் பிரதான எதிர்கட்சியான சிரோண்மணி அகாலிதள கட்சி , முன்னர் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து, பஞ்சாப் சட்டசபைக்கு 2022-ல் நடக்க உள்ள தேர்தலில் உ.பி.,யின் பிரதான எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இது தொடர்பாக சிரோண்மனி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் நிருபர்களிடம் பஞ்சாப் அரசியலில் புதிய நாள் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் பொது செயலர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறுகையில், பஞ்சாப் அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும். மற்ற தொகுதிகளில் சிரோண்மனி அகாலிதளம் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாயாவதி கட்சி போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கர்தார்பூர் சாஹிப், ஜலந்தர் மேற்கு, ஜலந்தர் வடக்கு, பக்வாரா, ஹோஷியாப்பூர் நகர், தசுயா, சம்கவுர் சாகிப், பஸ்ஸி பதனா, சுஜான்பூர், மொஹாலி, அமிர்தசரஸ் வடக்கு மற்றும் அமிர்தசரஸ் மத்தி உள்ளிட்ட 20 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


