Idhayam Matrimony

தமிழில் அறிமுகமாகும் கேரள நடிகர்

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தணுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, கேரள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ் என்ற  பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ்,  “ஜகமே தந்திரம்”  திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியாவதில் அவர் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இப்படத்தில் அவருடனும் உலகளவில் பிரபலமான ஹாலிவுட்  நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார். படம் குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது...

நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின்  “பீட்சா” படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. இப்போதுதான்  இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை சந்தித்தேன் என்றார்.

மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ குறித்து ஜார்ஜ் கூறும்போது...  நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சர்யங்கள் பெரும் சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை என்றார் மகிழ்ச்சியாக.  இப்படம் இம்மாதம்   18 ம் தேதியன்று உலகம் முழுதும் netflix ல் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து