எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., 2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் 2 மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன் என்றார் யுவ்ராஜ் சிங்.
__________
சுருண்டது மே.இ.தீவுகள் அணி
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர்.
தொடக்க வீரர் பிராத்வைட், ஷாய் ஹோப் ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நோர்ஜோ பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தனர். அடுத்து வந்த போனரை 10 ரன்னில் ரபடா வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்களை லுங்கி நிகிடி சாய்க்க 40.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 97 ரன்னில் சுருண்டது. ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 13.5 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அன்ரிச் நோர்ஜோ11 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
___________
வார்னர், ஸ்டாய்னிஸ் விலகல்
ஐ.பி.எல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது.
அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டியைக் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வருட தி ஹன்ட்ரட் போட்டி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சதர்ன் பிரேவ் அணிக்குத் தேர்வான ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.
____________
சேத்தன் சக்காரியா உருக்கம்
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா பலரது கவனத்தையும் பெற்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சக்காரியா அண்மையில் கொரோனா பாதித்ததன் காரணமாக தன் தந்தையை இழந்தார். இப்போது இலங்கை செல்லும் இந்திய ஒரு கிரிக்கெட் அணிக்கு சக்காரியா தேர்வாகியிருக்கிறார்.
இது குறித்து சக்காரியா தெரிவிக்கையில்., "நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது அப்பாவின் கனவு. இப்போது அப்பா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். கடந்த ஒரு ஆண்டு காலமாக வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இதுவரை எனக்கு சில மாதங்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளது" என்றார்.
___________
பாக். முன்னாள் வீரர் விருப்பம்
ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத், டோனியின் தலைமைத்துவ பண்புகளை வானளாவ புழந்து பேசியுள்ளார். டோனி போன்ற ஒரு கேப்டன் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் பயனடைந்திருக்கும் என்கிறார் யாசிர் அராபத். டோனி வீரர்களின் திறமையைத் துல்லியமாகக் கணித்து அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த கேட்பன் கூறுகள் கொண்டவர் என்கிறார் யாசிர் அராபத்.
தற்போதைய பாகிஸ்தான் அணி திறமையானது, ஆனால் டோனி போன்ற கேப்டன் தான் இவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று நினைக்கிறார் யாசிர் அராபத்.“எம்.எஸ். டோனி இப்போது விளையாடவில்லை. அவர் மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் நான் அவரை பாகிஸ்தன் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்திருப்பேன் என்று யாசிர் அராபத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 23 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்- எடப்பாடி
21 Aug 2025அரக்கோணம்: புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்து
21 Aug 2025மதுரை: தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்தினார்.
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
21 Aug 2025டெல்லி: தெரு நாய்கள் விவகாரம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
21 Aug 2025மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
-
காஷ்மீரில் நிலநடுக்கம்
21 Aug 2025காஷ்மீர்: காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது:-
-
நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்
21 Aug 2025அமெரிக்கா: உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 15 லட்சம் பெண்கள் மனு
21 Aug 2025சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 15 லட்சம் பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை தமிழர்கள் விவகாரம்: ஐ.நா. அமைப்பு முக்கிய முடிவு
21 Aug 2025ஜெனீவா: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை ஐ.நா. அமைப்பு நிறுத்தி வைத்தது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.