எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, ஏப். - 7 - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை கருணாநிதி குடும்பத்தி ன் சொந்த முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகா ஷ் காரத் கேட்டுக் கொண்டுள்ளார். கோவையில் அ.தி.மு. க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பிர மாண்டக் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் சொயலாளர் பிர காஷ் காரத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது - மேடம், ஜெயலலிதா அவர்களே, தமிழ்நாட்டின் அடுத்த முதல் அமைச்சர் நீங்கள் தான். இங்கே நடக்கு ம் இந்தப் பேரணி, கூட்டணிப் பேரணி அல்ல. கூட்டணிக் கட்சிகளின் வெற்றிப் பேரணி.
தமிழ்நாட்டில் , வருகிற 13 -ம் தேதி நடக்கும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மட்டும் முக்கியமானதல்ல. இந்த இந்திய துணைக் கண்ட த்திற்கே மிகவும் முக்கியமானது. மத்தியில், காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், முக்கியமான அங்கம் வகிக்கும், தி.மு.க. ஒரு ஊழல் கட்சி. இந்தக் கட்சி இந்திய நாட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு ஊழலுக்கு காரணமாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இதுவரை இல்லாத மிகப் பெரிய ஊழலாக இருக்கிறது. இந்த ஊழலுக்கு எல்லாம் ஊழலாக மத்தியில் தலைமையேற்று உள்ள காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர் ஷ் வீட்டு வசதி ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல்களுக்கு காங்கிர ஸ் கட்சியே காரணம். இது போன்ற ஊழல்களை தடுக்க லோக் பால் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தலைநகர் டெல்லியில் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேசபக்தர் ஒருவர் பட்டினிப் போ ராட்டத்தில், ஈடுபட்டு வருகிறார்.
இது போன்ற பல்வேறு ஊழல்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி துணை போய்க் கொண்டு இருக்கிறது. இந்த ஊழல் கூட்டணியை இந் தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தூக்கி எறிய வேண்டும்.
கடந்த காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பெட்ரோல் , டீசல் விலைகள் உயர்த்தப் பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் அபரிமிதமாக உயர்ந்துள்ளன. ஆனால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்த்தில் உள்ள தி.மு.க. வோ, மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ எந்த வித மான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தி.மு. க. என்பது ஒரு குடும்ப ஆட்சியாக செயல்படுகிறது. எனவே திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு.க.) என்ற பெயரை கருணாநிதி குடும்பத்தின் சொந்த முன்னேற்றக் கழகம் (சொ.மு.க.) என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும். அந்த அளவிற்கு குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. எனவே இந்த குடும்ப ஆட்சியை தமிழக வாக் காளர்கள் இந்தத் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மே 13 -ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் அ.தி.மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


