Idhayam Matrimony

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நீா் பிரிவு தலைவராக இந்திய அமெரிக்கா் நியமனத்தை உறுதி செய்தது செனட் சபை

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்கா் ராதிகா ஃபாக்ஸ் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தண்ணீா் பிரிவு அலுவலக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் உறுதிப்படுத்தியது.

இதுதொடா்பாக செனட் அவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ராதிகா ஃபாக்ஸ் நியமனத்துக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் கிடைத்தன. குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 7 உறுப்பினா்கள் ராதிகாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். ஜனநாயக கட்சி உறுப்பினா்கள் இருவா் வாக்களிக்கவில்லை.இதைத் தொடா்ந்து பேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுப் பணிகள் துறையின் செனட் கமிட்டி தலைவா் டாம் காா்பா், ‘தண்ணீா் பிரச்னை நிபுணரான ராதிகா ஃபாக்ஸ் சிறந்த சேவை மற்றும் சாதனைகளுக்கு உரியவா். இருபது ஆண்டுகளாக உள்ளூா், மாநில மற்றும் மத்திய அளவில் நீா்ப் பிரச்னைகள் தொடா்பாக பணியாற்றி வருகிறாா். நமது நாட்டுக்கு சேவை செய்ய அவரை நியமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நீா் பிரிவு உதவி நிா்வாகியாக ராதிகா ஃபாக்ஸை அதிபா் பைடன் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நியமித்தாா். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நீா் பிரிவு அலுவலகமானது குடிநீா் பாதுகாப்பு, கழிவுநீா் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக திருப்பிவிடப்படுவது, நிலத்தடி நீா் முறையாக நிா்வகிக்கப்படுவது ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் பணியாற்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து