எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி செளத்தாம்டனில் நடைபெற்று கொண்டிருக்கும் உள்ள நிலையில் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக இருப்பார் என்று கிரிக்கெட் ஜாம்வான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ள போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அது பேட்ஸ்மேனுக்கு சிறிது சிரமத்தையும் ஏற்படுத்தும். ஒரு பவுலர் சிறப்பாக பந்துவீசுகிறார் என அறிந்தால் எதிர் முனைக்கு சென்றுவிடுங்கள் என எனக்கு சொல்லி இருக்கிறார்கள் என கூறி சிரித்த சச்சின், ஜோக்குகளை கடந்து பும்ரா ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என தெரிவித்தார்.
_________
ரசிகர்களுக்கு நடால் அதிர்ச்சி
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவார் என்றே பெரும்பாலான ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் ஆட்ட முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் நடால். இந்த வருடம் நடைபெறுகிற விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். என்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னுடைய குழுவினருடன் ஆலோசித்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று நடால் கூறியுள்ளார்.
____________
நெய்மர் சாதனை கோல்
ரியோ டி ஜெனிரியோவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரில் பெரூ அணியை பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெனிசூலாவை 3- 0 என்று வீழ்த்திய பிரேசில் அணியிலிருந்து 6 வீரர்களை மாற்றினார் பயிற்சியாளர். நெய்மார் இதில் ஒரு கோலை அடித்து பிரேசில் கால்பந்தின் அனைத்து கால அதிக கோல்கள் அடித்த வீரர் ஆனார். பிரேசில் முன்னாள் நட்சத்திரம் ரொனால்டோவைக் கடந்தார்.
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வென்ற அணி என்ற சாதனையையும் பிரேசில் நிகழ்த்தியது. குரூப் பி-யில் டாப் நிலையில் உள்ளது. எடர்சன், அலெக்ஸ் சாண்ட்ரோ, தியாகோ சில்வா, எவர்டன், கேப்ரியல் பார்போஸா ஆகியோரை ஆரம்பத்திலேயே இறக்கினார் பிரேசில் மேனேஜர். 12வது நிமிடத்தில் கேப்ரியல் ஜெசூஸ் கொடுத்த அருமையான பாஸை அலெக்ஸ் சாண்ட்ரோ கோலாக மாற்றினார்.நெய்மார் தன் 68வது கோல் மூலம் முன்னாள் பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவைக் கடந்து அனைத்து கால அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


