எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
தி.மு.க. அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை 2 வாரங்களில் அறிக்கை வெளியிடப்படும். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரூ. 32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. ரூ. 32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது.
மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை மத்திய அரசே எடுத்து கொள்கிறது.
ரூபாய் 98-க்கு விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


