Idhayam Matrimony

கர்நாடக அணைகளில் இருந்து வந்த காவிரி நீர் தமிழகம் வந்தது

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

பென்னாகரம் : கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை தமிழகம் வந்தடைந்தது. 

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளம் உள்ளிட்ட இரு மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அளவிலான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில் கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் காலை கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடியும், கபினி அணையிலிருந்து 5283 கன அடி என மொத்தம் 10283 கன அடி தண்ணீர் ஆனது காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளிலிருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீரானது நேற்று காலை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக பகுதியான ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. 

கடந்த சில நாள்களாக தமிழக காவிரிக் கரையோரப் பகுதிகளான பிலிகுண்டு ஒகேனக்கல் அஞ்செட்டி நாற்றாம்பாளையம், கேரட்டி மற்றும் காவிரி கரையோரத்தில் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அவ்வப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதத்தில் இருமுறை அதிகபட்சமாக நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. 

மேலும் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடி என  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில் பிரதான அருவி சீனி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைகளாக காட்சியளித்தன. 

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீரானது சிறு சிறு குட்டை போல் தேங்கி காணப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 10 மணியளவில் தமிழக பகுதியில் உறைவிடமான பிலிகுண்டுலுவை கடந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக ஒகேனக்கல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு இன்று காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து