எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் நேற்று 2 வது நாளாக கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நேற்று முன்தினம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று காலை முதலே எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை முதலில் பிற்பகல் 2 மணி வரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். அதே போல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தனர்.
மக்களவை மீண்டும் கூடியவுடன் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் 15 நோட்டீஸ்களை அளித்திருந்தனர். விவாதம் நடத்த வேண்டும் என கோரி மைய பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். ஆனால் பூஜ்ய நேரத்தில் விவாதங்களை எழுப்பலாம் என அவை தலைவர் கூறினார். எனினும் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி வேண்டும் எனக்கூறி தி.மு.க. எம்.பி.க்களும் முழக்கமிட்டனர். இதன்பின் 2 மணிக்கு மாநிலங்களவை தொடங்கிய பின் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு மந்தமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். மீண்டும் அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு நாளை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டம் நாளை 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


