எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பா.ம.க. தலைவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும் அதனுடன் தொடர்புடைய வன்னியர் சங்க அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தன. இது குறித்து பேசிய முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி தமிழக முதல்வர் வரும் பிப்ரவரி மாதம் முதல் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. இது வன்னியர் பிரிவு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பதிவு செய்த வன்னியர் பிரிவு மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் MBC பிரிவை மூன்றாக பிரித்து மொத்தம் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினர்களுக்கு 7 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுஅமலுக்கு வந்ததையடுத்து முதல்வரை சந்தித்து பா.ம.க. தலைவர்கள் பலரும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


