எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சீன வீரர் மா லாங்கிற்கு எதிராக இந்தியாவின் சரத் கமல் போராடி தோல்வியுற்றார்.
20-வது இடத்தில்...
சீன வீரர் மா லாங் உலக சாம்பியன், தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளவர். இந்தியாவின் சரத் கமல் 20வது இடத்தில் உள்ளவர். சீன வீரர் மா லாங் 4-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார், முதல் செட்டில் மா லாங் 11-7 என்று வென்றார்.
2-வது செட்டில்...
ஆனால் 2-வது செட்டில் இந்திய வீரர் சரத் கமல் சில அபாரமான ஃபோர் ஹேண்ட் ஷாட், பேக் ஹேண்ட் ஷாட், வாலி ஷாட்கள் மூலம் சீன வீரர் மா லாங்குக்கு அதிர்ச்சியளித்து செட்டை 11-8 என்று கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்தில் 2வது செட்டில் சரத் கமல் 8-4 என்று முன்னிலை வகித்தார், இந்த சீன வீரரை இதுவரை யாரும் 4 புள்ளிகள் முன்னிலை பெற்றதில்லையாம்.
3-ம் - 4-வது செட்டில்...
3-வது செட்டில் இருவரும் மாறி மாறி வென்று ஆட்டம் இருவருக்கும் சமநிலையிலேயே சென்றது. 11-11 என்று கூட டஃப் பைட் கொடுக்கப்பட்டது. ஆனால் சரத் கமல் இரண்டு தவறுகளை இழைக்க மா லாங் 13-11 என்று 3-வது செட்டைக் கைப்பற்றினார். 4வது செட்டில் மா லாங் 6-0 என்று முன்னிலை பெற்றார். சரத் கமல் ஆட்டத்தை முறியடித்த மா லாங் செட்டை 11-4 என்று கைப்பற்றினார்.
46 நிமிடங்களில்...
5வது ஆட்டம் 6 நிமிடங்களில் 11-4 என்று சீன வீரர் சார்பில் முடிந்தது. ஆகவே சீன வீரர் மா லாங் 11-7, 8-11, 13-11, 11-4, 11-4 என்ற செட்களில் 46 நிமிடங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார், சரத் கமல் வெளியேறினார். ஆனால் சரத் கமல் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விடவில்லை. கடைசி வரை போராடி தோல்வியடைந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


