எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,செப்.21 - மத்திய அரசை கண்டித்து மதுரையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வழக்கம் போல் பஸ்கள் ஓடின. பள்ளி,கல்லூரிகள் இயங்கின. மத்திய அரசின் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சில்லறை அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நாடு முழுவதும் பந்த் நடத்தின. மதுரையில் தமிழ்நாடு வர்த்தக சங்கம், மடீட்சியா, உணவு வியாபாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் பேரவை ஆகியவை பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தன. நேற்று மதுரையில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கின. ஆனால் கீழமாசிவீதி, மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜகவினர் மதுரையில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் ஓட்டல்களும் அடைக்கப்பட்டிருந்தன.
டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பாரதீய ஜனதா கட்சியினர் ரயிலை மறிக்க சென்றனர். மதுரை பெரியார் பஸ்நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பாரதீயஜனதா சார்பில் கீழவாசல் பகுதியில் மாவட்ட செயலாளர் ராஜரத்தினம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 57 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் சொக்கிகுளத்தில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு மள்ளர்கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் சோலை பழனிவேல்ராஜன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மதுரை மாவட்டத்தில் லாரிகளும் ஓடவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


