எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வினேஷ் போகத் தோல்வி
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வினேஷ் போகத் தோல்வி அடைந்தார். பெலாரசில் வனேசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் இந்தியாவின் வினேஷ் போகத்.
____________
அன்ஷூ மாலிக் தோல்வி
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ‘ரெபிசாஜ்’ வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் ரஷியாவின் வளரியா கோப்லோவா எதிர்கொண்டார்.இதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு வீராங்கனைகளும் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடினார்கள். இருவரும் பிடிகொடுக்காமல் விளையாடினார்கள். முதல் மூன்று நிமிடத்தில் டெக்னிக்கல் முறையில் ரஷிய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார்.
அடுத்த மூன்று நிமிடங்களிலும் சிறப்பான வகையில் மல்லுக்கட்டினர். இந்த முறை டெக்னிக்கல் முறையில் இந்திய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார். இதனால் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. கடைசி ஒரு நிமிடத்தில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் ரஷிய வீராங்கனையிடம் மாட்டிக்கொண்டார். இதனால் 2, 2 என இரண்டு முறை ரஷிய வீராங்கனை புள்ளிகள் பெற்றார். ஆகவே, அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
______________
குண்டு எறிதல்: அமெரிக்காவுக்கு தங்கம்
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வீரர்கள், நியூசிலாந்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட 12 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரர்களும் தலா ஆறு முறை குண்டு எறிதல் வேண்டும். ஆறு வாய்ப்புகளில் எந்த வாய்ப்பில் வெகுதூரத்திற்கு குண்டு எறிந்தார்களோ, அது அவருடைய செயல்பாடாக எடுத்துக் கொள்ளப்படும்.
அமெரிக்க வீரர் ரியான் குரோசர் 6-வது வாய்ப்பில் 23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையை பதிவு செய்தார். மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாக்ஸ் 22.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஷ் 22.47 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
_____________
110மீ தடைதாண்டுதல்: ஜமைக்காவுக்கு தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100மீ தடைதாண்டும் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவே உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் பந்தய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவேவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஹோலோவே 13.09 வினாடிகளில் கடந்து 2-வது இடமே பிடிக்க முடிந்தது. மற்றொரு ஜமைக்கா வீரரான ரொனால்டு லெவி 13.10 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
____________
சர்ச்சைக்குள்ளான கம்பீர் கருத்து
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது, இந்த வெற்றி கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிகளை விடவும் பெரிது என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “1983, 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறப்போம். ஹாக்கியில் இந்த பதக்கம் எந்த ஒரு உலகக்கோப்பையை விடவும் பெரியது” என்று பதிவிட்டுள்ளார். ஆனால் கவுதம் கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் எடுபடவில்லை. இரண்டு விளையாட்டுகளையும் ஒப்பிடுவதே தவறு என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.
___________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


