எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும். அதில் மட்டுமே எங்களின் கவனம் உள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் பேசும் போதும் இதுதான் வலியுறுத்தப்பட்டது.
மற்றவர்களைப் போல நாங்களும் ஆப்கானிஸ்தானின் நிலையை உன்னிப்புடன் கவனித்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இந்தியா கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் மக்களுடன் நம்முடைய வரலாற்று உறவைப் பிரதிபலிக்கிறது.
ஆப்கானிய மக்களுடனான உறவு வெளிப்படையாகத் தொடரும் என்றே நான் நினைக்கிறேன். அது தலிபான்களின் நடவடிக்கையைப் பொருத்தது. காபூலில் நிலைமை என்னவென்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


