எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : பொதுமக்களை எக்காரணம் கொண்டும் போலீசார் ஒருமையில் அழைக்கக் கூடாது என கேரள டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது 16 வயது மகன் முன்பு போலீசார் தன்னை அவமரியாதையாக பேசியதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு வந்த போது, போலீசாரிடம் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள டி.ஜி.பி. அனில் காந்த், அனைத்து காவல்நிலையங்களுக்கும் நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களிடம் காவல் துறையினர் கண்ணியமாகவும், பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மரியாதையான வார்த்தைகளை மட்டுமே பொதுமக்களிடம் போலீசார் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எக்காரணம் கொண்டும் பொதுமக்களை வா, போ என ஒருமையில் அழைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள டி.ஜி.பி. அனில் காந்த், காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


