Idhayam Matrimony

குஜராத்தின் 17-வது முதல்வராக இன்று பூபேந்திர படேல் பதவியேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேலை பா.ஜ.க. எம்.எல்.க்கள் தேர்வு செய்துள்ளனர். அதை தொடர்ந்து அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜாத்தின் காந்திகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக பூபேந்திர படேலை எம்.எல்.ஏ.க்கள் தேர்தெடுத்தனர். 

பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கவர்னரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, குஜராத்தில் நேற்று மதியம் 3 மணி அளவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். 

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார் ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்லோடியா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பூபேந்திர படேல் உள்ளார்.  குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து