Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: ரஷ்ய அதிபர் புடின் தனிமைப்படுத்திக்கொண்டார்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவின் அதிபர் புடின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று ரஷ்யா. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இங்கிலாந்துக்கு  அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் இதுவரை  71லட்சத்து 76,085- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று பாதிப்பால்  1.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அந்நாட்டில் தினசரி பாதிப்பு ஏறத்தாழ 17 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதன் முதலாக தடுப்பூசி கண்டறிந்ததாக அறிவித்துக்கொண்ட ரஷ்யா, இன்னும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் அதிபர் புடின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. புடினுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, புதின் சுய தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக புடினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  புடின்  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து