எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில், கோதுமை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு ஆற்றுக்குள் விழுந்தன. என்ஜின் டிரைவர் உயிர் தப்பினார்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பிரோஸ்பூரில் இருந்து குர்தா ரோடு நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை ஒரு சரக்கு ரயில் புறப்பட்டது.
அதில், கோதுமை மூட்டைகள் ஏற்றப்பட்டு இருந்தன. அங்குல் ரயில் நிலையத்தை தாண்டி, நந்திரா ஆற்றின் மீது கட்டப்பட்ட ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது.
ரெயிலின் 6 பெட்டிகள், நந்திரா ஆற்றுக்குள் விழுந்தன. நல்ல வேளையாக, என்ஜின் பகுதி, தண்டவாளத்திலேயே நின்று விட்டதால் என்ஜின் டிரைவர் உள்ளிட்ட ஊழியர்கள் உயிர் தப்பினர். கனமழையால், தண்டவாளம் முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அந்த தண்டவாளம், ஒற்றைப்பாதை என்பதால், அந்த வழியாக வேறு ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 8 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


