Idhayam Matrimony

டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,428 டால்பின்கள் வேட்டை

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

டென்மார்க் ஆளுமைக்குட்பட்ட ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டானிஷ் நாட்டில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நிகழ்வாக நடைபெறும் கிரீன் டிராப் வேட்டையின் ஒரு பகுதியாக ஃபாரோ தீவுகளின் கடற்கரைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,428 டால்பின்கள் கொல்லப்பட்டன. வடக்கு அட்லான்டிக் தீவு கூட்டத்தில் குவியும் டால்பின்களை வேட்டையாடுவது என்பது இறைச்சி, மருத்துவ பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படுகிறது.

 

கடந்த 12-ம் தேதி கடலில் மிதந்த டால்பின்கள் கொல்லப்பட்டு மோட்டார் படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது டால்பின்களின் உடல்களில் இருந்து வழிந்த ரத்தத்தால் நீல வண்ண கடற்பரப்பு, செந்நிறமாக காட்சியளித்தது. டால்பின்களை கொல்வதை பாரம்பரிய நிகழ்வாக மேற்கொண்டாலும் உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த கொடூரத்தை பார்த்து கொதித்துப்போயுள்ளனர். மேலும் கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதேவேளையில் தங்களின் உணவு தேவைக்காகவே டால்பின்களை கொள்வதாகவும், தங்கள் உரிமையை பாதுகாக்க போராடுவோம் என்றும் ஃபாரோ தீவு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து