Idhayam Matrimony

தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாட்டில் ஒரு நாளில் போடப்பட்ட  தடுப்பூசி எண்ணிக்கையில் புதிய சாதனையாக அது அமைந்தது.

இந்த நிலையில்,  நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மீண்டும் குறைந்துவிட்டதாக சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்  “நிகழ்ச்சி முடிந்து விட்டது” எனப் பதிவிட்டுள்ளார். 

தனது பதிவோடு,  கடந்த 10 நாட்களில் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த வரைபடத்தையும் பகிர்ந்துள்ளார். கோவின் இணையதளம் வாயிலாக எடுக்கப்பட்ட அந்த தரவுகளின் படி, சாதனை எண்னிக்கைக்கு பிறகு நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து