எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெக்காய்: மகளிர் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சாதனை பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய அணி.
சுற்றுப்பயணம்...
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று மெக்காய் நகரில் உள்ள ஹாரப் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்ற 3 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்க் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தடுமாற்றம்...
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ரச்சேல் ஹெய்ன்ஸ் மற்றும் அலைசா ஹெல்லி களமிறங்கினர்.சிறப்பாக ஆடிய அலைசா ஹெல்லி 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
98 ரன்கள்...
பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பெத் மூனி மற்றும் அஷ்லெய்க் கார்ட்னெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தது. இருவரும் இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
264 ரன்கள்...
சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.பெத் மூனி 52 ரன்களுக்கும், அஷ்லெய்க் கார்ட்னெர் 67 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த டாஹ்லியா மெக்க்ரத் அதிரடியாக ஆடி 47 ரன்கள் எடுத்தார். இதனால் 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.
265 ரன்கள் இலக்கு...
இந்திய மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ராகர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராணா 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
ஷெபாலி வர்மா...
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷெபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தனா இணை சிறப்பாக விளையாடியது. ஸ்மிரிதி மந்தனா 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஷெபாலி வர்மா 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய யஸ்திகா பாட்டியா சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வந்த இந்திய அணி. பின்னர் வந்த தீப்தி ஷர்மா மற்றும் ஸ்நேஹ் ராணா நன்றாக ஆடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
ஜூலன் கோஸ்வாமி...
49.3 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் அதிகப்ட்சமாக அனபெல் சதர்லேந்த் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பாக பந்துவீசிய இந்திய மகளிர் அணியின் ஜூலன் கோஸ்வாமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
ஆறுதல் வெற்றி...
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. எனினும் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுவந்த நிலையில், இந்த தோல்வியின் மூலம் அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


