Idhayam Matrimony

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பஸ்களை இயக்கலாம் என பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் உள்ள நிலையில் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். வருகிற அக்டோபர் 14-ம் தேதி ஆயுதபூஜை (வியாழக்கிழமை ) விஜயதசமி (வெள்ளிக்கிழமை) வருவதால் சனி, ஞாயிறு வரை 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வசதி வருகிறது.

இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைக்கேற்றார்போல் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உயர்அதிகாரி கூறியதாவது., தமிழகத்தில் தற்போது இயக்கப்பட்டுவரும் பஸ்களை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் டெப்போக்களில் உள்ளன. தற்போது ஆயுதபூஜை பண்டிகை வருவதால் பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்றார்போல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். 

எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பஸ்களை இயக்கலாம் என பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பஸ்கள், சொகுசு பஸ்களும் இதில் அடங்கும். 300 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்ய விரும்புபவர்கள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து