எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 91 கோடியை கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72,51,419 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தற்போதைய நிலவரப்படி 91 கோடியைக் (91,54,65,826) கடந்துள்ளது. 88,75,020 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3கோடியே 31லட்சத்து 50,886- ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.93 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 100 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,52,902; கடந்த 201 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.75 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,41,642 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.53 கோடி கோவிட் பரிசோதனைகள் (57,53,94,042) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 102 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே, 1.66 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.61 சதவீதமாகவும் நேற்று பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை 36 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 119 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
12 Mar 2026புதுடெல்லி, யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
12 Mar 2026சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது.
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


