முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
DCM-1-2026-03-12

சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்கும் துணை முதல்வர்  உதயநிதி அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று (12.3.2026) பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட வே.ஆனைமுத்துவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்துவின நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,182 பயனாளிகளுக்கு 102.40 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5,945 பயனாளிகளுக்கு 177.87 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளையும், ஒரு இசைக்கலைஞருக்கு 43,000 ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகளை வாங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து