முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
EPS 2020 11-16

திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று. த.வெ.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றி நாங்கள் (அ.தி.மு.க.) எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனக்கு தெரிந்து பா.ஜ.க. தரப்பிலும் யாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தான் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவரை மத்திய மந்திரி பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று. த.வெ.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றி நாங்கள் (அ.தி.மு.க.) எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனக்கு தெரிந்து பா.ஜ.க. தரப்பிலும் யாரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. அதனால் எங்கள் மீது விமர்சனம் செய்ய முடியாது. எங்களுடன் மு.க.ஸ்டாலினால் நேரடியாக மோத முடியாது என்பதால் தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் இடையே தான் போட்டி என்கிறார். அ.தி.மு.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து