எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தல் பிரசாரம் முடிந்ததை அடுத்து வெளியூரைச் சேர்ந்தவர்கள், அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலியில் களக்காடு, நான்குநேரி உள்ளிட்ட நான்கு ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், திருப்பத்தூரில் இரண்டு ஒன்றியங்களிலும், விழுப்புரத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதேபோல் செங்கல்பட்டு, வேலூரில் தலா மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும், தென்காசியில் கடையநல்லூர், குருவிகுளம் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ள்ளக்குறிச்சியில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டையில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இந்த பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பிரச்சாரம் முடிந்த கையோடு வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின. முதற்கட்ட தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி, அன்றிரவே முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை மையமான சங்கரா கலைக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.‘
அனைத்துக் கட்சி பிரமுகர்கள், தேர்தல் அலுவலர் உள்ளிட்டோர் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறை சார்பில் வாகனம் நிறுத்தப்பட்டு மின் தடை இல்லாமல் இருக்க ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கான வாக்குப்பெட்டி, அண்ணா பொறியியல் கல்லூரியிலும், உத்தரமேரூர் பகுதிக்கான வாக்குப்பெட்டிகள் திருப்புலிவனம் பகுதியில் இயங்கும் அரசு கலைக்கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல ஆங்காங்கே உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


