முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர 10 கட்டளைகள் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் புதிதாக உறுப்பினராகச் சேர்வோருக்கு மதுப் பழக்கம் இருக்கக் கூடாது, போதைமருந்து பயன்படுத்தக்கூடாது, குறிப்பாக கட்சியை ஒருபோதும், பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சி நவம்பர் 1ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் புதிய தலைவரையும் தேர்ந்தெடுக்க உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் புதிதாகச் சேர்வோர் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் இடம் கிடைக்கும். அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டபின்புதான் உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

இதில் முக்கியமானது, கட்சியில் உறுப்பினராகச் சேர்வோர் சட்டத்துக்கு அதிகமான அளவில் கூடுதலாகச் சொத்து வைத்திருக்கக்கூடாது, கட்சிக்காக எந்த இடத்திலும் இறங்கி களப்பணியாற்ற வேண்டும் என்பதாகும். இதற்கிடையே வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடி, புதிய உறுப்பினர்களைச் சேர்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.

புதிய உறுப்பினருக்கான 10 கட்டளைகள்

1. அங்கீகரி்க்கப்பட்ட காதி ஆடைகளை தொடர்ந்து அணிவதை பழக்கமாகக் கொள்வேன்.

2. எந்த மது வகைகளையும் குடிக்கமாட்டேன், போதை மருந்துகளையும் பயன்படுத்தமாட்டேன்.

3. சமூகரீதியான பாகுபாட்டை எந்தரீதியிலும் , எந்தவடிவத்திலும் பின்பற்றமாட்டேன். 

4. பாகுபாட்டை கருதி யாரையும் நீக்க மாட்டேன்.

5. மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி ஒருங்கிணைந்த சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

6. காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி இடும் ஆணைக்கு இணங்க குறைந்தபட்சம் களப்பணியாளராக நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.

7. சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கமாட்டேன்.

8. மதச்சார்பின்மை, சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் கொள்கைகளை பரப்பும் நோக்கில் நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.

9. கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை, திட்டங்களை, கட்சி்க்கு உரிய வழிமுறை தவிர்த்து வேறு எந்த வழியிலும், பொதுவெளியிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்மறையாக விமர்சிக்கமாட்டேன்.

10. அனைத்து இந்தியர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் அதை முன்னிறுத்தியே உழைப்பேன்.

ஆகிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து