எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்ரீநகர் : 2019ம் ஆண்டில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு அமித்ஷா நேற்று அஞ்சலி செலுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் நினைவாக கடந்த ஆண்டு கட்டப்பட்ட நினைவிடத்தில் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு, தியாகிகளின் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டார்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமித்ஷா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடுகையில், " கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணிச்சலான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு, புல்வாமா தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பிற்காக நீங்கள் செய்த உன்னத தியாகம், பயங்கரவாத அச்சுறுத்தலை வேரோடு பிடுங்குவதற்கான எங்கள் தீர்மானத்தை வலிமையாக்குகிறது. துணிச்சலான தியாகிகளுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


